Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 23 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
1989 ஆம் ஆண்டு தலதா மாளிகை மீது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) நடத்திய தாக்குதல் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன கேள்வி எழுப்பியபோது, பாராமன்றத்தில் சூடான வாதங்கள் எழுந்தன.
சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினரை ஒரு கொலைகாரனின் மகள் என்று அழைத்தார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கவிரத்னவுக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டது.
கேள்வி குறித்து சுருக்கமாக பேசுமாறு எம்.பியிடம் சபாநாயகர் கேட்டுக் கொண்டார், எனினும், கேள்வி எழுப்பி கொண்டிருந்த ரோகிணி கவிரத்ன எம்.பி. வாயை மூடிக்கொள்ளுமாறு சபாநாயகரை கேட்டுக் கொண்டார்.
"நான் எனது கேள்விக்கு வரும்போது நீங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள்" என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன கூறினார்.
"நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள்? கேள்வி எழுப்புவதற்கான வழி இதுவல்ல" என்று சபாநாயகர் பதிலளித்தார்.
குறுக்கிட்ட பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன, தனது அறிக்கையை வாபஸ் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
ஆளுங்கட்சியின் சபை முதல்வர் எழுந்து நின்றபோது சபை பதற்றமடைந்தது.
"மாத்தளையில் உள்ள மனித புதைகுழியில் இருந்து பல எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்போது ஒரு கொலைகாரனின் மகள் எங்கள் முன் நிற்கிறாள்," என்று அவர் கூறினார்.
இந்த கட்டத்தில் கோபமடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை நோக்கி, அவர் நிலையியல் கட்டளைகளை மீறியதாகக் குற்றம் சாட்டி கூச்சலிடத் தொடங்கினர்.
1989 ஆம் ஆண்டு ஐ.தே.க அரசாங்கத்தின் அமைச்சர்களும் எம்.பி.க்களும் சித்திரவதை கூடங்களை நடத்தினர் என்பது அனைவரும் அறிந்ததே என்று ஆளுங்கட்சியின் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க கூறினார்.
"சித்திரவதை கூடங்களை நடத்திய அனைவருக்கும் எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்வோம்" என்று பிமல் ரத்நாயக்க கூறினார்.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago