2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

”தொல்பொருள் எனும் போர்வையில் பௌத்தத்தை விதைக்காதே”

Simrith   / 2024 மார்ச் 18 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த எட்டாம் திகதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறி மலை சிவன் ஆலய வழிபாட்டின் போது கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக்கோரியும் அச்சம்பவத்தைக் கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னிலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம் பெற்றது . 

இப்போராட்டத்தை சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

வழிபாடு எமது அடிப்படை உரிமை ஆதி சிவன் ஆலயம் எமது பூர்வீகம்,ஈழத்தின் சமயத் தலைவர்களை அபகரிக்காதே, தொல்பொருள் எனும் போர்வையில் பௌத்தத்தை விதைக்காதே, வழிபாட்டைத் தடுக்கும் உரிமையைக் பொலிஸாருக்கு கொடுத்தது யார்,ஆலய நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்,ஆலயங்கள் சைவத் தமிழர்களின் பூர்வீக அடையாளம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். 

இதில் சுமார் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.

வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற புனிதமான சிவராத்திரி நாளில் இடம் பெற்ற சம்பவம் அடக்குமுறையாகும். பொலிஸார் இவ்வாறு செயற்பட்டமை கண்டிக்கத்தக்கது என திருகோணமலையில் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அகத்தியார் அடிகளார் தென்காயிலை ஆதினம் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் பேசுகையில் நாங்கள் வழிபாட்டில் ஈடுபடும் போது இவ்வாறான விடயங்களை மேற்கொள்வது நல்லதல்ல. இந்த நாட்டிற்கு ஒரு சமுதாயத்திற்கு ஏற்றதல்ல இறைவனை வழிபடும் போது அடக்குமுறையான நிகழ்வு சைவத்திற்கு மட்டுமல்ல முழு சமூகத்திற்கும் ஏற்க முடியாது எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .