2026 ஜனவரி 21, புதன்கிழமை

தலை, முண்டம் வேறாக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

Editorial   / 2021 மே 20 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஏ.எம்.பாயிஸ்)

தலையும் முண்டமும் வேறாக்கப்பட்ட நிலையில் சடலமொன்று எஹலியகொடை மின்னான பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றை அடுத்து நேற்று முன்தினம் ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் வீதியோரத்தில் காணப்பட்ட தலையில்லாத சடலத்தையும் குறித்த இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் புதர்களுக்குள் வீசப்பட்டிருந்த பையொன்றுக்குள் சுற்றப்பட்டிருந்த தலையையும் மீட்டுள்ளனர்.

தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வரும் பொலிஸார் இச்சடலம் கலப்பிட்டமட பிர தேசத்தை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவருடையது என அடையாளம் கண்டுள்ளனர்.

கொல்லப்பட்ட மேற்படி  இளைஞருக்கு கொலை குற்றம் சாட்டப்பட்ட வழக்கொன்று தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளை எஹலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X