2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

தலைக்கவசத்தால் தாக்கியதில் ஒருவர் பலி

Editorial   / 2025 ஜூன் 25 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இருவருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின் போது, ​​தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், புளத்சிங்கள, ஹல்வதுர, எபிடவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

புளத்சிங்கள, ஹல்வதுர பகுதியைச் சேர்ந்த மானகே சமன் பாலித (வயது 50) என்பவர் நான்கு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர் 23 வயதுடையவர் என்றும், இறந்தவரின் உறவினரை மணந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புளத்சிங்கள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .