2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

தலைமை ஆசிரியரை மாற்ற தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்த சம்பவம்

R.Tharaniya   / 2025 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெங்களூர்: கர்நாடகாவில் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சுலைமான் என்கிற இஸ்லாமியரை பணியிடம் மாற்றம் செய்வதற்காக, அங்குள்ள இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்துள்ளனர். இதில் 11 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம், ஹூள்ளிக்கட்டி பகுதியில் அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு சுலைமான் கொரிநாயக் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். கிட்டத்தட்ட 13 வருடங்களாக அவர் அங்கு பணியாற்றி வருகிறார். உள்ளூர் கிராம மக்களிடம் அவர் மிகவும் நல்ல உறவில் இருக்கிறார்.

முஸ்லிம் தலைமை ஆசிரியர்

அதேநேரத்தில் அவர் முஸ்லிம் என்பதால், இந்து மற்றும் வலதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக இருந்துள்ளனர். அதனால் தலைமை ஆசிரியர் சுலைமானை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இந்து இயக்கங்கள் கூறி வந்துள்ளனர். ஆனால், அவரின் சிறப்பான சேவை காரணமாக பணியிடமாற்றம் செய்யவில்லை.

இதையடுத்து அவருக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்தி, பள்ளியில் இருந்து மாற்றி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்தொடர்ச்சியாக பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விஷத்தை கலந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாகர் பாட்டீல், கிருஷ்ணா மதர், மகன்கௌடா பாட்டீல் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பூச்சி மருந்து கலப்பு

இது குறித்து பெலகாவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பீமாசங்கர் குலேத் கூறுகையில், "கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்தப் பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையின்போது தண்ணீர் தொட்டியில் ஒரு வித நாற்றம் வந்தது. அதற்குள்ளேயே ஒரு பூச்சி மருந்தின் பாட்டிலும் கண்டறியப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .