Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 22 , பி.ப. 04:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாமரைக் கோபுரத்தின் வணிக செயற்பாடுகள் மார்ச் மாதத்திலிருந்த ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தென்னாசியாவின் இரண்டாவது உயர்ந்த கோபுரமான தாமரைக் கோபுரம் 350 மீற்றர் உயரத்திலும் 10 ஹெக்டயர் நிலப்பரப்பிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் நிர்மாணப் பணிகளுக்காக 104 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படுவதுடன், இதில் 80 சதவீதமான நிதி சீனாவின் எக்ஸீம் வங்கியால் செலுத்தப்படுகின்றது.
தற்போது தாமரைக் கோபுரத்தின் பணிகள் நிறைவு செய்யப்பட்டு வருவதாக, இத்திட்டத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
விடுதிகள், தொலைத் தொடர்பு அருங்காட்சியகம், சிற்றுண்டிச்சாலைகள், பல்பொருள் அங்காடிகள், ஹோட்டல்கள், கேட்போர் கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்கள், வரவேற்பு மண்டபங்கள் என இக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கோபுரத்துக்குள் உள்நுழைவதற்காக 4 பிரதான வாயில்கள் காணப்படுவதுடன், அதில் 2 விசேட விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கோபுரத்தில் 50 தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் 50 ஒலிபரப்பு சேவை வழங்குநர்களுக்கும் 10 தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
52 minute ago
1 hours ago
3 hours ago