Janu / 2026 பெப்ரவரி 10 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தம்புள்ளை - ஹபரணை பிரதான வீதியில் திகம்பத்தஹா பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளொன்று வேனொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும், வேன் சாரதி காயமடைந்துள்ளதாகவும் சீகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.
திகம்பத்தஹ பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் பணிபுரியும் தம்புள்ளை மற்றும் தனமல்வில பிரதேசத்தைச் சேர்ந்த கிம்ஹான் ஜெயதிலக மற்றும் தவிது சேதிய ரத்நாயக்க ஆகிய ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஹபரணையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றொரு வாகனமொன்றை முந்திச் செல்ல முயன்ற போது தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேனில் மோதியுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
24 minute ago
31 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
55 minute ago