Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
George / 2017 ஜூன் 08 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜே.எ.ஜோர்ஜ்
“சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர்தான், கடந்த அரசாங்கக் காலத்தில், சைட்டத்துக்கு அனுமதியளிக்கும் வர்த்தமானியை சபையில் சமர்ப்பித்தார். அதற்கு முதலில் அவர், இந்தச் சபையில் மன்னிப்பு கேட்கவேண்டும்” என, சபை முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் 21/2 இன் கீழ் உரையாற்றிய ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி, சைட்டம் தொடர்பில் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டினார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த வர்த்தமானி அறிவித்தலை, 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 11ஆம் திகதி, நாடாளுமன்றத்தில், தினேஷ் குணவர்தனவே சமர்ப்பித்திருந்தார்.
அத்துடன், அந்த வர்த்தமானி அறிவித்தலில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவனம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சைட்டத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்கள் மருத்துவ கல்விக்காக 2011 ஆம் ஆண்டு முதல் அனுமதி பெறமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மஹிந்த ராஜபக்ஷ மாணவர்களுக்கு புலமை பரிசில் வழங்கியதுடன் 600 மில்லியன் ரூபாய் பணத்தை இந்த கல்லூரிக்கு வழங்கியுள்ளார். சைட்டத்துக்கு அனுமதி வழங்கிவிட்டு இன்று எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.
தினேஷின் இந்த செயற்பாடு சந்தர்ப்பவாத அரசியலில் உச்சக்கட்ட செயற்பாடு. அவரைப் போல நாங்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்யவில்லை, என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
14 minute ago
39 minute ago
1 hours ago