2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

திருகோணமலையில் ஆயுதங்கள் மீட்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஏ.எம்.கீத்

திருகோணமலை, அலஸ்தோட்டம் பகுதியில் சடலம் ஒன்றை புதைப்பதற்காக மயானத்தில் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, ஆயுதங்கள் சிலவற்றை கண்டெடுத்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுயில் மண்ணுக்குள் புதைந்திருந்த கலனொன்றை திறந்து பார்த்தபோது அதற்குள் ஆயுதங்கள்  காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

துப்பாக்கி ரவைகள் மற்றும்  மகசின் உள்ளிட்ட ஆயுதங்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட பிரதேசத்தில் இந்திய இராணுவக் காலத்தில் டெலோவின் பயிற்சி முகாம்இயங்கியதாகத் தெரியவருகின்றது.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் யாவும் சுத்தப்படுத்தி, பாவிக்கும் நிலையில் காணப்படுவயாகவம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆயுதங்கள் தொடர்பில் திருகோணமலை நீதிமன்றில் நாளை (07) அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த  உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .