Nirosh / 2021 மார்ச் 14 , பி.ப. 07:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(செ.கீதாஞ்சன்)
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரு பொலிஸார் உள்ளிட்ட மூவரை முல்லைத்தீவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வழக்குகளின் சான்றுப்பொருள்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்தின் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸார் உள்ளிட்ட மூவரே இவ்வாறு இன்று(14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பழைய கட்டடத்தில் வைக்கப்பட்ட வழக்குகளின் சான்றுப்பொருள்களை திருடியதாக இவர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் குறித்த கட்டடத்தில் வைக்கப்பட்ட வழக்குகளின் சான்றுப்பொருள்கள் தொடர்பில் விவரங்களை பரீசீலனை செய்துகொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago