Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 01 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- மகேஸ்வரி விஜயனந்தன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில், கடந்த 28ஆம் திகதியன்று செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படுமென, பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் செயலாளர் எஸ். இராமநாதன் தெரிவித்தார்.
மேலும், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புத் தொடர்பில், அதிகாரமுள்ள அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்துக்கு வெளியே குரல் கொடுப்பதைப் போன்று, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் குரலெழுப்ப வேண்டுமெனவும், அவர் கூறினார்.
இது தொடர்பில், தமிழ் மிரர் பத்திரிகைக்கு, நேற்று (31) கருத்துத் தெரிவித்த அவர், 1998ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டு இருந்த பல சரத்துகள், கடந்த 28ஆம் திகதியன்று கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் நீக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கான 3 மாத நிலுவைக் கொடுப்பனவு பற்றி, குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடாமல், அது குறித்து, தனியே ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அது, நிலுவையாகக் குறிக்கப்படாமல், நன்கொடைப் பணம் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளதாகவும், இராமநாதன் கூறினார்.
“கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படும் விடயங்கள், வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும். அப்போதே, அந்த ஒப்பந்தம் சட்டரீதியானதாகும். இந்நிலையில், நிலுவை குறித்து தனியே கடிதத்தில் குறிக்கப்பட்டு உள்ளமையானது, அப்பணத்தை வழங்காது புறக்கணிப்பதற்கான சதி என்றும், அவர் தெரிவித்தார்.
மேலும், கூட்டு ஒப்பந்தம் 2018 ஒக்டோபர் மாதம் நிறைவுக்கு வருவதால், புதிய கூட்டு ஒப்பந்தத் திகதியும், 2018 ஒக்டோபர் மாதம் என்றே உள்ளடக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், புதிய ஒப்பந்தத்தில், 2019 ஜனவரி 28ஆம் திகதியிலிருந்து அமுல்படுத்தப்படும் என்றே குறிப்பிடப்பட்டு உள்ளதாகக் கூறிய அவர், தொழிலாளர்களுக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த 60 ரூபாய் வருகைக் கொடுப்பனவு, இம்முறை நீக்கப்பட்டுள்ளதாகவும் இது, தொழிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான சதியென்றும் அவர் சுதெரிவித்தார்.
மேலும், உற்பத்தி ஊக்குவிப்புத் தொகையான 140 ரூபாயும் இம்முறை நீக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், வருகைக்கான 60, ஊக்குவிப்புக்கான 140 என, மொத்தம் 200 ரூபாயை நீக்கிவிட்டே, 200 ரூபாய் அதிகரிப்பெனத் தெரிவிக்கப்படுவதாக, அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
43 minute ago
52 minute ago