Editorial / 2019 ஜூலை 30 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸாரின் எச்சரிக்கையை மீறி பயணித்த வான் ஒன்றின் மீது பாணந்துறை, பின்னவத்த பகுதியில் வைத்து இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மத்தோகொட பகுதியில் வான் ஒன்றை திருடிச் சென்றமை தொடர்பில் வானின் உரிமையாளர் மத்தேகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வலான குற்றத்தடுப்பு பிரிவினர் பாணந்துறை பகுதியில் வைத்து குறித்த வானை மடக்கிப் பிடித்த சந்தர்ப்பத்தில் சந்தேக நபர்கள் இருவரும் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, அவ்விடத்திற்கு வந்த இராணுவ அதிகாரிகள் இருவர் சந்தேக நபர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
59 minute ago
1 hours ago
2 hours ago