Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2024 டிசெம்பர் 23 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆழ்கடலில் கை விரலில் தூண்டில் குத்தியதால் கடும் சுகவீனமடைந்த மீனவர் ஒருவருக்கு கடற்படையின் விஜயபாகு கப்பலில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக தரைக்கு கொண்டுவந்த கடற்படை அதிகாரிகள், அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (22) அனுமதித்துள்ளனர்.
இலங்கையின் தெற்கே காலியில் இருந்து சுமார் 479 கிலோமீற்றர் தொலைவில் ஆழ்கடலில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக 7 மீனவர்களை ஏற்றிச் சென்ற 'துவா ஷைனி' என்ற பலநாள் கப்பல் கடந்த 5 ஆம் திகதியன்று சென்றுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தினால் கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு வழங்கப்பட்ட அறிவித்தலின் பிரகாரம், மீனவர்களை மீட்பதற்காக கடற்படை கப்பலான விஜயபாகு அனுப்பி வைக்கப்பட்டது.
விஜயபாகு கப்பலில் இருந்த மருத்துவர், ஆபத்தான மீனவரைப் பரிசோதித்து, கப்பலில் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான அவசர சத்திரசிகிச்சையில், மீனவரின் வலது கை விரலில் குத்திய தூண்டிலை அகற்றி, தேவையான சிகிச்சை அளித்தார். அதன்பின்னரே மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
01 May 2025
01 May 2025