Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Simrith / 2025 மார்ச் 09 , பி.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன் தொடர்ந்து நீதிமன்ற நடவடிக்கைகளைத் தவிர்த்து வந்தால், சட்ட விதிகளின்படி அவரது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
பதில் ஐஜிபி பிரியந்த வீரசூரிய ஏற்கனவே வெளியிட்ட சுற்றறிக்கையின் கீழ் சொத்துக்களை முடக்க முடியும் என்று அவர் கூறினார்.
மோதரையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
முன்னதாக, கைது செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்கு ஐஜிபி தென்னகோனுக்கு உதவியதாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னகோனை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் அவருக்கு உதவி செய்யும் எந்தவொரு நபரும் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தென்னக்கோன் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை, மேலும் அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
20 May 2025