2025 ஜூலை 05, சனிக்கிழமை

தேங்காய் எண்ணெயைப் பரிசோதிக்க நடவடிக்கை

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வாரத்திலிருந்து தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரமற்ற ரீதியில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப்பெறும் தகவல்களுக்கமையவே இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனை நடவடிக்கையின் போது பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகளின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை அல்லது விநியோகம் தொடர்பிலானத் தகவல்களை குறித்த பிரதேசங்களிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .