2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’தேசிய தின அறிவித்தல் தேவையற்றது’

Editorial   / 2019 ஜனவரி 26 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுதந்திர தினக் கொண்டாட்டங்களை, தேசிய தினக் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது என, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்தன அண்மையில் கூறியிருந்த நிலையில், சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்கவேண்டிய அவசியம் கிடையாது என, அமைச்சர் மனோ கணெசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,

அரசமைப்பின் 8ஆம் சரத்தில், சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக, தேசிய தினம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என, அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்​ததைக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தினத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அவசியமும் ஏற்படவில்லை என்று கூறினார்.

அரசமைப்பின் பிரகாரம், இனிவரும் காலங்களில், ​பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய தினமாகக் கொண்டாடப்படும் என்று, அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்ததோடு, பெப்ரவரி மாதம் கொண்டாடப்படுவது தேசிய தினமேயன்றி, அது சுதந்திர தினம் அல்ல என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .