2026 மே 02, சனிக்கிழமை

தேசிய பட்டியல் உறுப்பினராக மீண்டும் சாந்த பண்டார

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சாந்த பண்டாரவின் பெயர் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர, இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட சாந்த பண்டார இராஜினாமா செய்திருந்தார்.

முன்னாள் அமைச்சரும்- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சாலிந்த திசநாயக்க உயிரிழந்ததை அடுத்து, வெற்றிடமாகிய அவரது நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்துக்கு, தெரிவாகும் நோக்கில் அவர் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

எனினும், குறித்த வெற்றிடத்துக்கு எச்.எம்.டி.பி. ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான வர்த்தமானி வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .