Janu / 2025 ஒக்டோபர் 29 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு வழக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய, தேசிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார புதன்கிழமை (29) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இரண்டு வழக்குகள் தொடர்பிலே அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
அவர் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேகநபர் தேசிய நில விநியோக திட்டத்தில் பங்கேற்பதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
அதன்படி, முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரீசிலித்த நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
35 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
1 hours ago
1 hours ago