2026 மே 06, புதன்கிழமை

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நியமனம்

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 09 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 41 (அ), 103 (1) உறுப்புரைக்கு அமைய, ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, இதன் தலைவராக நிமல் ஜீ.புஞ்சிஹேவாவும் உறுப்பினர்களாக எம்.எம்.மொஹமட், எஸ்.பீ.திவாரத்ன, கே.பி.பி.பத்திரன, ஜீவன் தியாகராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் நாளை தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .