Editorial / 2019 ஓகஸ்ட் 12 , பி.ப. 01:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் கூடவுள்ளதுடன், அண்மையில் உயிரிழந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு மற்றுமொருவரை நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
வெற்றிடம் ஏற்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தெரிவுசெய்யப்படுவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சாந்த பண்டார, அண்மையில் இராஜினாமா செய்திருந்தார்.
எனினும், அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் தற்போது பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை தவிர, 2019 ஆம் ஆண்டுக்கான வாக்களர் பட்டியலை மறுசீரமைப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
16 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
6 hours ago
09 May 2026