2026 மே 02, சனிக்கிழமை

தேவாலயங்களுக்கு விசேடப் பாதுகாப்பு

Nirosh   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு கத்தோலிக்க மக்களின் பாதுகாப்புக்கருதி, கத்தோலிக்க தேவாலயங்களுக்கு விசேடப் பொலிஸ் பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸாருக்கு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

இன்று இரவு நடைபெறும் கிறிஸ்மஸ் ஆராதனைகளில் அதிகமானோர் கலந்துக்கொள்வார்கள் என்பதால், அதுத் தொடர்பில் விசேடக் கவனஞ் செலுத்த வேண்டுமெனவும் அனைத்து  சிரேஷ்ட பொலிஸாருக்கும் பொலிஸ்மா அதிபர் கடிதமூடாக ஆலோசனை வழங்கியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்றிரவு முதல் நாளையும் (25) இந்த விசேடப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .