2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தைக்குப் பின்னர் மாற்றம்?

Editorial   / 2021 ஜனவரி 13 , மு.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சரவையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என, அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை மாற்றம், கடந்த டிசெம்பர் மாதம், இடம்பெறவிருந்தது. எனினும், சில காரணங்களால் அது பிற்போடப்பட்டது. இந்நிலையில், இம்மாதம் 19ஆம் திகதிக்கு முன்னர், அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 இதேவேளை, நீதியமைச்சர் அலி சப்ரி, தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்யவிருந்தார் எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், அவரைப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுமாறும், அவரைக் கைது செய்யுமாறும் பௌத்த அமைப்புகள் சில, ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அண்மையில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .