Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
S.Renuka / 2025 மார்ச் 09 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பட்டங்களை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில்லை என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, பட்டப்படிப்புகளைத் தொடங்குவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் அத்தகைய உள்ளூர் நிறுவனத்திற்கும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திற்கும் இடையே செல்லுபடியாகும் ஒப்பந்தம் உள்ளதா? என்பதைச் சரிபார்க்கவும் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், வெளிநாட்டுப் பல்கலைக்கழகம் பொமன்வெல்த் பல்கலைக்கழக ஆண்டு புத்தகத்தில் அல்லது உலக உயர் கல்வி தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறியுமாறும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், உள்ளூர் நிறுவனத்தில் இளங்கலைப் படிப்புகளுக்கு போதுமான வசதிகள் உள்ளதா? என்பதையும், உள்ளூர் நிறுவனம் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் நேரடிப் பதிவுக்கான வசதிகளை வழங்குகிறதா? என்பதையும் உறுதி செய்து தெரிந்து கொள்ளுமாறும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களின் அதிகாரப்பூர்வ பட்டியல் www.mohe.gov.lk இல் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
20 May 2025