Freelancer / 2021 நவம்பர் 15 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த ஓரிரு நாட்களில் ஏற்படக்கூடிய கொரோனா தொற்றின் அதிகரிப்பை தற்போது கட்டுப்படுத்த முடியாது என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த 10 தொடக்கம் 15 நாட்களுக்குள் மக்கள் கவனக்குறைவாக நடந்துகொண்டதன் விளைவாக இந்த அதிகரிப்பு ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர்,
தற்போது காணப்படும் கொரோனா பாதிப்பை இன்னும் ஓரிரு நாட்களில் சரி செய்ய முடியாது, அதற்கு நேரம் எடுக்கும் என்று தெரிவித்த அவர், 10 முதல் 15 நாட்களுக்கு முன்னர், மக்களின் பொறுப்பற்ற நடத்தையின் விளைவே இது என்றும் கூறினார்.
எதிர்காலத்தில் தொற்றாளர்கள் அதிகரிப்பதைத் தடுக்க, கொரோனா நடைமுறைகள் நிச்சயம் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.
எனவே, வெளியில் செல்லும்போது சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago