Editorial / 2019 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்து நடைபெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார் என, அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
“செயற்குழு கூட்டத்தின் போது சிறந்த வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். அச்சமடைய வேண்டாம். கூட்டணி கட்சிகள் எம்முடன் உள்ளன. அடுத்து வாரம் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார். தோற்கடிக்க இலகுவான வேட்பாளர்தான் கோட்டாபய.
ஊடக நிறுவனங்களுக்கு தீ வைப்பது, கொலை, வெள்ளை வான் கலாசாரம் கொண்ட அடக்குமுறைக்கு விருப்பம் என்றால், இருண்ட கடந்த காலத்துக்கு செல்லமுடியும். இன்று என்னவிதமான குறைபாடுகள் காணப்பட்டாலும், நாட்டில் சுதந்திரம் உள்ளது, நீதித்துறை சுயாதீனமாக உள்ளது” என்றார்.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago