2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ந.ஐ.தே.மு.வை பதிவு செய்ய நடவடிக்கை

Gavitha   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் மற்றும் ஜாதிக்க ஹெல உறுமய உள்ளிட்ட சில கட்சிகளை இணைத்து கடந்த ஜூலை மாதம் 12ஆம் திகதி நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்பட்டதுடன் இதற்கான அனுமதியை ஜூலை 11ஆம் திகதி பொரளை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் வழங்கப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான இந்த கூட்டணியில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜாதிக்க ஹெல உறுமய உள்ளிட்ட பல கட்சிகள் கையொப்பமிட்டிருந்தன.

பொதுத்தேர்தலின் பின்னர் இதனை அரசியல் கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க அப்போது கூறியிருந்தார்.

இந்நிலையிலேயே, இந்த கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாக, அதன் பங்காளி கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .