2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நாடு திரும்பாவிட்டால் ‘மகேந்திரன் கைதாவார்’

Gavitha   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துச் செல்ல, ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்று தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, தற்போது வெளிநாடு சென்றுள்ள அர்ஜுன மகேந்திரன், இலங்கைக்குத் திரும்பாவிட்டால் அவரை சர்வதேச பொலிஸாரினூடாகக் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, அமைச்சர் குறிப்பிட்டார்.

வலஸ்முல்ல பிரதேசத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் இவ்வாறு கூறினார். 

இதற்கிடையில், மத்திய வங்கியில் மேலும் பல ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக, பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா, பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது கூறியுள்ளார்.  

இதேவேளை, பிணைமுறி மோசடி சம்பந்தமான விசாரணைகளை மேற்கொண்டிருந்த கோப் குழுவின் உறுப்பினர்கள் சிலரின் செயற்பாடுகள், பிரச்சினைக்குரியதாக இருந்ததாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .