Kanagaraj / 2015 நவம்பர் 23 , மு.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணை இந்தவருடம் ஜூன் மாதம் 26ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றவியல் தண்டனை கோவைச்சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியசரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவது, இலங்கை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். தனது வீட்டில் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய 30 வயதான பெண்ணொருவர், கல்கிஸை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, நீதியரசருக்கு எதிராக கல்கிஸை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனது வீட்டுப் பணியாளர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டிலேயே, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நீதியரசர் சரத் டி அப்றூ, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல், ஓய்வு பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அதற்கான ஆவணங்களை, கடந்த ஒக்டோபர் மாதமே அவர், கையளித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago