2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நீர் கட்டணம் அதிகரிப்பு: குறைந்த கட்டணம் ரூ. 250

George   / 2016 நவம்பர் 12 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிசெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து குடிநீர் கட்டணத்தை அதிகரிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி நீர்க்கட்டணம் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

3 வருடங்களுக்கு ஒரு தடவை நீர்க் கட்டணம் அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த நான்கு வருடங்களாக நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய முறைக்கு அமைவாக குறைந்த கட்டணமாக 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சமூர்த்தி பயனாளிகளுக்கு குறித்த விலைக்கு 15,000 லீற்றர் நீர் பெற்றுக்கொடுக்கப்படும். பாடசாலை, விகாரை மற்றும் ஆலய பூமிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தில் மாற்றங்கள் ஏற்படாது என்று தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .