2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நுரைச்சோலை மீது அவதானிப்பு: மூவர் கொண்ட குழு நியமனம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 25 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலையிலுள்ள லக்விஜய நிலக்கரி மின்நிலையத்தின் அண்மைய செயலிழப்பு குறித்தான சுயாதீன விசாரணையை மேற்கொள்வதற்காக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளது.

இக்குழுவின் தலைவராக, முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ஷிப்லி அசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இலங்கைப் பொறியியலாளர் சங்கக் கல்லூரியின் மின் பொறியியல் பிரிவின் தலைவர் ஆர்.ஐ.செனவிரத்ன, மொரட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடப் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர், இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நுரைச்சோலை லக்விஜய மின் நிலையத்தின் செயலிழப்பு காரணமாக, நாடு முழுவதிலும் மின் தடை அமுல்படுத்தப்பட்டிருந்தது.

“மின் பிறப்பாக்க நிலையங்களில் ஏற்படும் எதிர்பாராத பாரிய செயலிழப்புக்கள், தொடர்ச்சியான மின் வழங்கலில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆணைக்குழுவால் அமைக்கப்பட்ட புதிய குழுவானது, எதிர்வுகூரப்படாத செயலிழப்பின் காரணங்களைத் தேடி அடையாளம் காண்பதோடு, அவை போன்ற செயலிழப்புகளைத் தவிர்ப்பதற்கான பரிந்துரைகளையும் வழங்கும்” என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .