Editorial / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி
மட்டக்களப்பு, வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை(13) அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த இந்த யானை, வீதிகளில் சென்றவர்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
இதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நகரப் பகுதிக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். காட்டு யானைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமங்களுக்குள் மாத்திரமின்றி நகர் பகுதிகளுக்குள்ளும் ஊடுருவி தாக்கி வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026