2026 மே 06, புதன்கிழமை

’நஞ்சு கலந்துள்ளமை நிரூபிக்கப்படவில்லை’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

சந்தைகளில் உள்ள தேங்காய் எண்ணெய்களில் நஞ்சு கலந்திருப்பதாக, எந்தவோர் இடத்திலும் நிரூபிக்கப்படவில்லை எனத் தெரிவித்த வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, ஃபாம் ஒயிலுக்கான வரியை அதிகரித்து, தேங்காய் எண்ணெய்க்கான வரியை அரசாங்கம் குறைத்ததாலேயே, தேங்காய் எண்ணெய்களில் நஞ்சு கலந்திருப்பதாகத் தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையிலான நேற்றைய (06) பாராளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு, எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்துரையாற்றிய அமைச்சர், தங்கொட்டுவ பொலிஸாரால் அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்த நஞ்சு கலந்த தேங்காய் எண்ணெயை ஏற்றிச்சென்ற பௌஸர்கள் தொடர்பிலும், சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

மேலும், குறித்த நஞ்சு கலந்த தேங்காய் எண்ணெய்  எவ்வாறு சந்தைக்குக் கொண்டுசெல்லப்பட்டது என்பது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ஃபாம் ஒயில் பக்கம் நிற்காது, தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்பவர்கள் பக்கம் நிற்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொண்ட அமைச்சர் குணவர்தன, நஞ்சு கலந்த தேங்காய் எண்ணெய் இருக்கும் இடங்கள் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தகவல்கள் வழங்குவார்களாக இருந்தால், அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்தில் தேங்காய் எண்ணெயைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கான குதம் இல்லை எனவும் சந்தேகத்துக்குரிய பொருள்கள் காணப்பட்டதால், அதனை தனியாருக்குச் சொந்தமான களஞ்சியசாலைகளில் களஞ்சியப் படுத்துவதற்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .