2025 மே 21, புதன்கிழமை

“நாட்டில் அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை”

S.Renuka   / 2025 மே 21 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கடுமையான கவலைகளை தெரிவித்துள்ளது.

அதன்படி, பிற முக்கிய மருந்துகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் இன்சுலின் போன்றவற்றின் கடுமையான பற்றாக்குறையை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மருந்து விநியோகத்தில் தொடர்ந்து ஏற்படும் இடையூறுகள் நோயாளி பராமரிப்பு மற்றும் மருத்துவமனை செயல்பாடுகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மற்ற சுகாதார அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .