2025 மே 06, செவ்வாய்க்கிழமை

நெடுந்தீவில் வேட்பாளர் மீது தாக்குதல்

Freelancer   / 2025 மே 06 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது நெடுந்தீவில் நேற்று (5) தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.  

நெடுந்தீவு பிரதேச சபை வேட்பாளரான முருகேசு அமிர்தமந்திரன் என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளர்.

தாக்குதலுக்கு இலக்கானவர், தலையில் காயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X