2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நதீஷா ராமநாயக்கவிற்கு தங்கப் பதக்கம்

Freelancer   / 2023 ஜூலை 14 , மு.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கத்தை வெற்றி கொண்டார். 

இதேவேளை, பிரான்ஸில் நடைபெறும்  பரா மெய்வல்லுநர் உலக சாம்பியன்ஷிப்பில் இலங்கையின் சமித்த துலான் வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார்.

தாய்லாந்தின் பேங்கொக்கில் நடைபெறும் ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாள் போட்டிகள் நேற்று நடைபெற்றன.

மகளிருக்கான 400 மீட்டர் ஓட்டத்தை 52.61 விநாடிகளில் கடந்து இலங்கையின் நதீஷா ராமநாயக்க தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .