2026 மே 09, சனிக்கிழமை

‘நத்தாருக்கு முன் புதிய அறிவிப்பு’

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படுமெனத் தெரிவித்த கொரோனாத் தடுப்புக்கான செயலணியின் பிரதானி,இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தனிமைப்படுத்தல் குறித்து, மேல் மாகாணத்தில் உள்ள மக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள இராணுவத் தளபதி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  எடுப்பதே எப்போதும் சிறந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

நத்தார் பண்டிகைக்குச் சில வாரங்களே உள்ள நிலையில், இது தொடர்பாக அடுத்த வாரமளவில் ஆராயப்படும்.   மக்கள் அதிகமாக ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் வகையில் மேலதிக சுகாதார வழிகாட்டுதல்களை அமுல்படுத்த வேண்டுமா என்பது குறித்து அதன்போது தீர்மானிக்கப்படும் என்றும் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து இந்த மாத இறுதிக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வரும் என சுகாதார அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .