2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

”நான் வேண்டாம் என்றேன்”: “அவர்கள் வேண்டும் என்றனர்”

Editorial   / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு DJ விருந்தில் தனது காதலனுடன் நடனமாடியபோது, ​​31 வயது ஸ்பானிஷ் பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து தாக்கியதாக கூறப்படும்   சுற்றுலா வழிகாட்டிகள் மூவர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் கற்பிட்டி  குடாவ பகுதியில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டியின் கண்டகுளிய பகுதிக்கு தனது காதலனுடன் வந்த பெண், அருகிலுள்ள ஹோட்டலில் நடந்த DJ நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் அந்த DJ விருந்தில் இருந்துள்ளனர். அனைவரும் இசை மற்றும் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்ததாகவும் அந்தப் பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஒரு குழு ஆண்கள் தன்னை அணுகி, தகாத முறையில் தன்னைத் தொட்டதாகவும், பின்னர் தான் எதிர்த்தபோது தன்னைத் தாக்கியதாகவும் அவர் கூறினார்.

அவர்கள் தாக்கியதில் அந்த பெண்ணின் இடது கண்ணுக்கு மேல் காயம் ஏற்பட்டுள்ளது. அவர், புத்தளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

அதற்பின்னர் கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் அந்தப் பெண் எழுத்துப்பூர்வமாக ஆகஸ்ட் 31 ஆம் திகதி கல்பிட்டி முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்து, அந்த, மூன்று சந்தேக நபர்களை அடையாளம் கண்ட பொலிஸார், கைது செய்துள்ளார்.

  கற்பிட்டியைச் சேர்ந்த 23, 34 மற்றும் 39 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு கற்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .