R.Tharaniya / 2025 டிசெம்பர் 04 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம் வழங்குவதற்காக கடற்படை நாடு முழுவதும் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
அதன் கீழ், ஊவா மாகாண நீர் வழங்கல் வாரியத்தின் கீழ் உள்ள மஹியங்கனை நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மத்திய மாகாண நீர் வழங்கல் வாரியத்தின் கீழ் உள்ள பேராதெனிய கட்டம்பே நீர் சுத்திகரிப்பு நிலையம் வெள்ளத்தால் சேதமடைந்த செயலிழந்த நிலையில் நீர் பம்புகளை பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் கடற்படை சுழியோடி உதவியை வழங்கியது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட இந்த சுழியோடி உதவி நடவடிக்கையில் ஐந்து கடற்படை வீரர்களை கொண்ட இரண்டு சுழியோடி குழுக்கள் பங்கேற்றன.
அதன்படி, கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக நீருக்கடியில் நீர் பம்பின் செயல்பாட்டிற்கு இடையூறாக இருந்த மஹியங்கனை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குவிந்திருந்த சேறு மற்றும் பிற குப்பைகள் மிகுந்த முயற்சியுடன் அகற்றப்பட்டு அதன் அசல் நிலைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


8 minute ago
18 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
28 minute ago