Editorial / 2026 ஜனவரி 22 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

நமது நாட்டிற்கு புதிய அரசியலமைப்பொன்று தேவையாக காணப்படுகின்றது. இதனைச் செய்வதற்கான மக்கள் ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கம் காணப்படுவதால், சிவில் சமூகத்தின் பல்வேறு தரப்புகள் இதற்கான முன்முயற்சியை எடுக்க ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுத்தன. இது அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையில் கூட உள்ளடங்கியிருப்பதால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க முடியும். இதனை முன்னெடுப்பதற்கு எதிர்க்கட்சி தயார். மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பனவற்றின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் இந்த விடயம் சேர்க்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பு ஜானகி ஹோட்டலில் புதன்கிழமை (21) அன்று நடைபெற்ற One Text Initiative பட்டறையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்கள் விடுதலை முன்னணிக்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசியலமைப்புத் திருத்தம் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு பொருந்திப் போக வேண்டும். இதன் கீழ், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
அரசாங்கம் இதை முன்னின்று செய்ய வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி இதற்குத் தயாராக இருந்தாலும், அரசாங்கம் இதற்குத் தயாராக இல்லை. நமது நாட்டின் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துறை, நீதித்துறை மற்றும் சுயாதீன ஊடகங்கள் அதிகாரங்களுக்கு இடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகளுக்குள் செயற்பட வேண்டும். தன்னிச்சையாக செயல்படுவதற்கும், சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கையையும் நான் எதிர்கின்றேன். இவை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஆகும். அரசாங்கம் தெரிந்து கொண்டே இவற்றைச் செய்து வருகின்றது.
இந்த அரசாங்கம் நாட்டு மக்களை சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயற்பட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
33 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago