2026 ஏப்ரல் 28, செவ்வாய்க்கிழமை

’நல உதயம்’ அறிமுக விழா

Editorial   / 2026 ஏப்ரல் 22 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 புதிய அலை கலை வட்டம், தனது சமூக நலப் பிரிவான 'நல உதயம்' அணியை மீளுருவாக்கம் செய்துள்ளது. இதன் அறிமுக நிகழ்வு, விருது வழங்கல் மற்றும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு விழா ஆகியன எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் தேதி (26.04.2026) நடைபெறவுள்ளன.

வத்தளை நகரசபை மண்டபத்தில் அன்று மாலை 2:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. புதிய அலை கலை வட்டத்தின் ஸ்தாபகர் ராதா மேத்தா தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், 'ஹாசிம் உமர் பவுண்டேஷன்' நிறுவனர் ஹாசிம் உமர் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

வத்தளை நகரசபைத் தலைவர் வீ. பிரகாஷ் இந்நிகழ்விற்கு முன்னிலை வகிக்கவுள்ளார். விழாவின் சிறப்பம்சமாக, வத்தளைப் பிரதேசத்தை மையமாகக் கொண்டு நீண்டகாலமாகச் சமூக சேவையில் ஈடுபட்டு வரும் 10 சிறந்த ஆளுமைகளுக்கு 'நல உதயம் விருது' வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .