2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா ஆரம்பம்

Freelancer   / 2025 ஜூலை 29 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்றம் இன்று ஏராளமான மக்கள் கூட்டத்துடன் ஆரம்பம் ஆகியுள்ளது.

இன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மகோற்சவ பெருவிழா ஆரம்பமாக உள்ளது. 

நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலையானது செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி நேற்றும் விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.

அதாவது, சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற இந்த பூஜையில் கொடிச்சீலை எடுத்துச் செல்லப்பட்டு ஆலயத்தை சென்றடைந்தது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .