2025 ஒக்டோபர் 08, புதன்கிழமை

நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்

Editorial   / 2025 ஒக்டோபர் 08 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களாக பெண்கள் நவம்பர் மாத இறுதிக்குள்  ணியமர்த்தப்படுவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) தெரிவித்தார்.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் நிதியொதுக்கீட்டை நிறைவேற்றுவதற்கான விவாதத்தைத் தொடங்கி வைத்து அமைச்சர் இவ்வாறு கூறினார்.

நவம்பர் மாத இறுதிக்குள் பெண் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மெட்ரோ பேருந்து சேவையையும் தொடங்குவோம். பேருந்து டிக்கெட்டுகள் மோசடி செய்யப்படுவது அனைவரும் அறிந்த உண்மை. எனவே, அட்டை கட்டண முறையை நிறுவ கோரிக்கை விடுக்கப்பட்டது.

 தற்போதுள்ள பேருந்து டிக்கெட் இயந்திரங்கள் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்துவதற்கான வசதிகளுடன் நவம்பர் 30 ஆம் திகதிக்குள் வழங்கப்படும். பொது பயணிகள் போக்குவரத்து இன்னும் மோசமான நிலையில் உள்ளது. அதைத் தீர்க்க அனைவரும் உதவுமாறு அமைச்சர் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X