2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாடாளுமன்றில் ஆசனங்கள் ஒதுக்குவதில் சிக்கல்

Editorial   / 2018 நவம்பர் 06 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு ஆசனங்களை ஒதுக்குவது குறித்து, இதுவரை இறுதி தீர்மானத்துக்கு வரவில்லையென, நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர், இடம்பெற்று பல புதிய அமைச்சர்கள் பதவியேற்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பத்திரம் இதுரை நாடாளுமன்றத்துக்கு கிடைக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களிலும் மேலும் பலர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ள நிலையில், உறுப்பினர்கள் ஆளுங்கட்சி அல்லது எதிர்கட்சியுடன் இணையும் சந்தர்ப்பம் உள்ளதால், நாடாளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்க முடியாதுள்ளதாகவும் , நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் 14ஆம் திகதி காலை 10 மணிக்கு நாடாளுமன்றம் கூட்டப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ள நிலையில், 13ஆம் திகதியளவிலேயே ஆசனங்கள் ஒதுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தற்போதைய சபாநாயகரை நீக்க வேண்டுமெனில் அவருக்கெதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படவேண்டுமெனவும் இத்தவெல தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .