2026 மே 14, வியாழக்கிழமை

நாட்டின் சிலப்பகுதிகளில் கடும் மழை பெய்யும்

J.A. George   / 2021 மே 28 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இன்றைய தினம் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேற்கு, சப்ரகமுவ, மத்திய , வடமேற்கு ஆகிய மாகாணங்கள் மற்றும் காலி , மாத்தறை ஆகிய மாவட்டங்களில் சில வேளைகளில் மழை பெய்யும்.

ஊவா மாகாணத்தில் ஒரு சில இடங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அதேவேளை நாடு முழுவதும் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .