2025 ஜூலை 16, புதன்கிழமை

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களில்: ஐவர் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 06 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களால் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குருநாகல்- பொத்துஹெர பிரதேசத்தில் குழி ஒன்றில் வீழ்ந்து, சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

​நேற்றிரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இதில் 4 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுவர்க​ளே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று மாலை 4 மணியளவில் மாவடினல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கடுகண்ணாவை பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் 40 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன், பல வர்த்தக நிலையங்களுக்கும் சேதமடைந்துள்ளன.

மேலும், நேற்றைய தினம் கலன்பிந்துனுவெவ, வாரியபொல, ஹுங்கம ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 33, 19,58 வயதுடைய மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .