Editorial / 2019 செப்டெம்பர் 12 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படுவதாக அந்தத் திணைக்களம் கூறியுள்ளது.
குறித்தப் பிரதேசங்களில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அடுத்த சில நாட்களுக்கு காணப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிகளவான வாய்ப்புகள் உள்ள நிலையில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
9 hours ago
02 May 2026