2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

’நாட்டை நேசிப்பவர்கள் சிந்தியுங்கள்’

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு நாடு, ஒருசட்டம் என்பதனை, வெறும் வார்த்தை களுக்கு அப்பால் சென்று, உண்மையில் நடைமுறைப்படுத்துவது எப்படி? நாட்டை நேசிப்பவர்கள் சிந்திக்கவேண்டிய தருணம் வந்துள்ளது என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.

சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள  காணொளியில்  முன்னாள் அமைச்சர் மங்கள இதனை தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் சிறைச்சாலை வாசலில், தாய்மார்கள் கண்ணீர்விட்டு அழுது, தென்பகுதியில் கண்ணீர்விட்ட தாய்மார்களை முன்னாள் அமைச்சர் மங்கள நினைவுபடுத்தினார்.   

அதன் பின்னர், நாங்கள் வடபகுதியின் தாய்மார்களின் கண்ணீரை மாத்திரமில்லை; அரச பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரையும் பார்த்துள்ளோம் எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

கொலை செய்யப்படுபவர்கள் எங்களின் தேசத்தின் பிள்ளைகள்,என தெரிவித்துள்ளஅவர், தென்பகுதியில் கொல்லப்பட்ட சிங்களவர்கள், வடபகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள் மகரசிறைச்சாலையில் கொல்லப்பட்டவர்கள் 2012 ஆம் ஆண்டு  வெலிக்கடையில் கொல்லப்பட்டவர்கள் எங்களின் பிள்ளைகள். எங்கள் நாட்டின் பிள்ளைகள் என்பதை நாங்கள் மறக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .