2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

நாளை ’இளஞ்சிவப்பு நிலவு’

Freelancer   / 2025 ஏப்ரல் 12 , பி.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை அதிகாலை 5 மணியளவில் வானில் 'இளஞ்சிவப்பு நிலவு' (PINK MOON) தோன்றவுள்ளது. இதை வெறும் கண்களால் காண முடியும்.

இந்த ஆண்டின் மிகச்சிறிய முழு நிலவாக இது இருக்கும். ஏனெனில் சந்திரன் பூமியிலிருந்து அதன் மிகத் தொலைவான புள்ளியான அபோஜியில் இருக்கும்.

எனவே இதை MICRO MOON என்றும் அழைக்கின்றனர்.

வசந்த காலத்தில் வரும் முதல் முழு நிலவு என்பதால் பிங்க் நிலா எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது பிங்க் நிறத்தில் காட்சியளிக்காது.

வட அமெரிக்காவில் வசந்த காலத்தில் பூக்கும் காட்டுப்பூவான ஃப்ளோக்ஸ் சுபுலாட்டா பூ "மோஸ் பிங்க்" என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூக்கள் வசந்தத்தின் துவக்கத்தைக் குறிக்கின்றன. இதன் பின்னணியிலேயே PINK MOON என்று பெயர் வந்தது.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X