2025 ஜூலை 10, வியாழக்கிழமை

நாளை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்

Editorial   / 2018 நவம்பர் 04 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளைய தினம் (05) நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றத்தை அண்டிய வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கருகில் மேற்கொள்ளப்படவுள்ள எதிர்ப்பு நடவடிக்கையின் காரணமாகவே போக்குவரத்து இவ்வாறு மட்டுப்படுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவித்து, நாடாளுமன்ற சுற்றுவட்டாரப் பகுதியில் நாளைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள மக்கள் போராட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கவென, 1500 பொலிஸாரை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .