2025 ஜூலை 16, புதன்கிழமை

நிதியுதவியை நிறுத்தினால் இலங்கையும் பாதிக்கும்

Editorial   / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தினால், உலக சுகாதார அமைப்பின் ஊடாக உதவிகளைப் பெற்றுவரும் இலங்கைப்போன்ற நாடுகள் பாதிக்கப்படக்கூடுமென, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு ஐ.தே.க தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அனுப்பிவைத்துள்ள கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா உலக சுகாதார அமைப்பு மீது குற்றஞ்சுமத்தி எடுத்துள்ள குறித்த தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென, ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், உலக சுகாதார அமைப்பு மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க அதுவரை நிதியுதவிகளை அமெரிக்கா தொடர்ச்சியாக வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .